பொகவந்தலாவையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயினா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 6 பேருக்கு இன்று(01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


 இத்தோட்டத்தில் கடந்த 28ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தாருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோட்டத்தில் முதலில் இனங்காணப்பட்ட தொற்றாளர் பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றமையால் வர்த்தக உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதுடன் அவருடன் தொடர்பை பேணி வந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.