நோர்வூட் தமிழ் மகா வித்தியால ஆசிரியர் ஒருவருக்கு நேற்றைய தினம்(05) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பாடசாலைக்கு இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு,குறித்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாடசாலை முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளது.
குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்த மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டவுள்ளன.
குறித்த தொற்றாளர் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர் எனவும் அண்மையில் இவர் டயகம பகுதியில் இடம்பெற்ற விருந்தோம்பல் நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.