கம்பஹா மாவட்டத்தில் உள்ள சுதந்திர வர்த்தக வலையத்தில் இரு ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து புதிதாக கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று(4) நான்கு மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கம்பஹாவில் 41 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மொத்தமாக 5561 தொற்றாளர்களும், அவர்களை இனம் காண்பதற்காக 86 ஆயிரத்து 732 பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.