இலங்கைக்கு கொரானா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கவும் விநியோகிப்பதற்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியொருவர் , யூனிசெஃப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டிம் சடர்ன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் அரசின் தலையீடு அவசியம் என இதன்போது பிரதிநிதிகள் குழு பிரதமரிடம் தெரிவித்துள்ளது.
இதனூடாக, நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசி திட்டம் மேலும் வலுவடையும் என அவர்கள் குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தடுப்பூசியை பெற்றுக்கொடுத்தாலும் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.