கேகாலை தம்மிக பெரேராவால் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாணியை பருகிய அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரகாபொல,கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தையும் அவரது தாய் உள்ளிட்ட ஐவருக்கு இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தம்மிக்கவின் பாணியை அருந்தியதாக அவர்களால் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளான ஐவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை கவனத்தில் எடுக்காமல் பல மணி நேரம் நெருக்கடி மிகுந்த வரிசையில் நின்று அந்த பாணியை பெற்றுக்கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே சட்டதிட்டங்களை புறக்கணித்து இவ்வாறான விடயங்களை பின்பற்றுவதன் மூலம் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.