Thursday, December 3, 2020

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!


  மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று(03) காலை வரை 506 ஆக அதிகரித்துள்ளது என மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து 294 தொற்றாளர்களும்,நுவரெலியா மாவட்டத்தில் 160 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 52 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் அக்குறணையில் 78  அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதுவே கண்டி மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் அம்பகமுவ பிரதேச செயலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும். அதன் எண்ணிக்கை 57 ஆக பதிவாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று காலை வரையான 24 மணித்தியாலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 26 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதில் 14 பேர் நுவரெலியா மாவட்டத்தில் இருந்தும் 12 தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் இருந்தும் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 38 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 20 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!