மேலும் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 182 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,060ஆக அதிகரித்துள்ளது.