Tuesday, December 8, 2020

பொதுமக்கள் பயன்படுத்தும் நீரோடை ஒன்றில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய ஆடைகள் மீட்பு.



கிரிதலே- பக்கமூன பிரதான வீதியின் கபர போக்குவ பிரதேசத்தின் நீரோடை ஒன்றிலிருந்து கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையின் போது அணிவிக்கப்படும் பாதுகாப்பு ஆடைகள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்திலுள்ள விசேட தேவையுடைய ஒருவரால் இந்த ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது  சில கண்ணாடி போத்தல்களும் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த நீரோடையின் நீர் கிரிதலே குளம் வரைக்கும் செல்வதுடன், சாதாரண மக்களும் இந்நீரை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகள் குறித்த விசேட தேவையுடைய நபராலேயே எரியூட்டப்பட்டுள்ளன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!