பண்டிகை நாட்களில் ஊரடங்கா? வெளியான அறிவிப்பு!

 

எதிர்வரும் பண்டிகை நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டிகை நாட்களில் முடக்கநிலையை அறிவிப்பதா இல்லையா என்பதை வார இறுதிநாட்களும், அதற்கு அடுத்துவரும் சில தினங்களுமே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறான சூழ்நிலையில் மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.