கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது!

 


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 

நேற்று முன்தினம்(08) மாத்திரம் 798 பேர் இனம் காணப்பட்டனர். அதில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர் என covid-19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

175 பேர் வெலிக்கடை சிறைச்சாலையை சேர்ந்தவர்கள். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 12,604 ஆக அதிகரித்துள்ளது.

 

கம்பஹா மாவட்டத்தில் நேற்று முன்தினம் 97 பேர் இனங்காணப்பட்டனர்.அவர்களில் 55 பேர் மஹர சிறைச்சாலையை சேர்ந்த கைதிகள் ஆவர்.கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக 7,019 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

 

அதற்கு மேலதிகமாக களுத்துறை மாவட்டத்தில் 53 பேரும்,கண்டியில் 40 பேரும்,குருநாகலில் 11 பேரும், இரத்தினபுரியில் 15 பேரும், காலியில் 3 பேரும்,அம்பாறையில் 44 பேரும்,கேகாலை,மாத்தளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் நுவரெலியாவில் 6 பேரும் அடங்குகின்றனர்