மாஸ்டர் படத்தை 1000 திரையரங்குகளில் வெளியிடத் திரைத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள்.
மாஸ்டர் ரிலீஸாவதால், பொங்கலுக்கு வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. வெளியாகும் என்று அறிவித்திருந்த அனைத்துப் படங்களுமே பின்வாங்குகிறது.
இந்த நிலையில், மாஸ்டருக்குப் போட்டியாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்ய விரும்புகிறாராம் சிம்பு.
தயாரிப்பு தரப்பு விரும்பாத நிலையிலும், பொங்கலுக்கு வந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிம்பு என்று சொல்லப்படுகிறது.