இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார்.
அதன்படி
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு-12
பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும்,கொலன்னாவை
பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும், ராஜகிரிய
பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும்
கொழும்பு-10 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு
உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.