மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ.நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன,குமுதினி விக்கிரமசிங்க,ஜனக் டி சில்வா,அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.
ஜனாதிபதி இதற்கான நியமனக் கடிதங்களை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.
அதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.புதிதாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதிகள் தொடர்பான விபரம் பின்வருமாறு.
01- திருமதி.மேனகா விஜேசுந்தர
02-திரு.
டி.என்.சமரக்கோன்
03-திரு.எம்.பிரசந்த டி
சில்வா
04-திரு.எம்.டி.எம்.லபார்
05-திரு.
சி.பிரதீப் கீர்த்திசிங்க
06-திரு.சம்பத் பீ.அபயகோன்
07-திரு.எம்.எஸ்.கே.பி.விஜேரத்ன
08-திரு.எஸ்.யு.பீ.கரலியத்த
09-திரு.ஆர்.குருசிங்க
10-திரு.ஜி.ஏ.டி.கணேபொல
11-திருமதி.கே.கே.ஏ.வி.ஸ்வர்ணாதிபதி
12-திரு.மாயாதுன்ன கொரயா
13-திரு.பிரபாகரன் குமாரரட்னம்
14-திரு.டபுள்யூ.என்.என்.பி.இத்தவல