அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

கடந்த 16ம் திகதி அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவர் வெளியில் பல இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இம்மாதம் 18ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்விலும் இவர் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் செயற்பட்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்று(21) கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு சுகாதார பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.