கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத சம்பத் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.