அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் திடீரென்று அரசியல் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும்
விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் அகில இந்திய
தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்றும் கூறப்படுகிறது.
இந்த
நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தையடுத்து, அடுத்த கட்டமாக ஒரு யூடியூப் சேனலை
நடிகர் விஜய் தொடங்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
இனி விஜயின் திரைப்பட தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் இந்த சேனலில் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விஜயின் பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விஜயின்
கோடிக்கணக்கான ரசிகர்கள இந்த சேனலை பின்
தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்,எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்தால்
இந்த சேனல் அவரது பிரசாரத்திற்கு பயன்படும் எனவும் கூறப்படுகிறது.