அமைச்சர் சி.பி.ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன்,நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.