கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 616 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களில் கொழும்பு,களுத்துறை,கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 266 பேரும், கண்டியில் 99 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 94,பேரும் களுத்துறையில் 48 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிக தொற்றாளர்கள் பதிவாகிய கொழும்பு மாவட்டத்தில் 65 பேரும், மட்டக்குளியில 2 பேரும், கொம்பனித்தெருவில் 17 பேரும், கோட்டையில் 15 பேரும், மருதானையில் 10 பேரும், ஒருகொடவத்தையில் 8 பேரும், ப்ளூமெண்டலில் 8 பேரும், தெஹிவளையில் 8 பேரும் புதுக்கடையில் 7 பேரும், அவிசாவளையில் 6 பேரும், பிலியந்தலையில் 5 பேரும், வெள்ளவத்தையில் 4 பேரும், அங்கொடையில் 4 பேரும் வெல்லம்பிட்டியவில் 4 பேரும், கிருலப்பனையில் 3 பேரும் தெமட்டகொடையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய இடங்களில் ஒருவர் இருவர் என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.