Tuesday, December 15, 2020

சட்டவிரோத மதுபானத்தை அருந்தி இருவர் பலி!

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்தியதால், மீரிகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

54 மற்றும் 47 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 
சகோதரர்களான மேற்படி இருவரும் அவர்களின் தாயின் மரண நிகழ்வுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!