அவிசாவளை உட்பட 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவிசாவளை,கொஸ்கம, ருவான்வெல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவிசாவளையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அவிசாவளையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.