Monday, December 21, 2020

பிரபல பேக்கரி ஒன்றில் பணியாற்றும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!



இரத்மலானையில் அமைந்துள்ள பிரபல பேக்கரி ஒன்றில் 23 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேக்கரியில் பணிபுரியும் 50 பேர் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த பேக்கரியில் இருந்து நாடளாவிய ரீதியில் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் குறித்த பேக்கரி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!