பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பின்வரும் விவரங்கள் கோரப்பட்டுகின்றன.பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் முகவரி, அடையாள அட்டை எண் உட்பட பெயர் விவரங்களை, பஸ் நடத்துநர்கள் புத்தகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஒரு பஸ்ஸில் பயணித்த பயணியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் பயணித்த மற்யை பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த இது உதவியாக இருக்கும் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுப்போக்குவரத்து சேவைகளைக் கொண்டுள்ளவர்கள், பயணிகளின் தகவல்களை சேகரித்து வைக்கவேண்டும் என்றும் இதன்மூலம், அவசரத் தேவைகளின்போது, பயணிகளைத் தொடர்புகொள்ள இலகுவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய அட்டைகளை, பலர் தங்கள் வசம் வைத்திருப்பர் என்றும் ஆனால் பலரிடம் அது இருப்பதில்லை என்தால், தங்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் அலைபேசி இலக்கம் ஆகியவை உள்ளடங்கிய சிறிய கடதாசித் துண்டை, எப்போதும் பயணிகள் தங்களிடம் வைத்துக்கொள்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், தங்கள் தகவல்களை புத்தகத்தில் நிரப்பாமல், தங்களிடம் உள்ள கடதாசித் துண்டை கொடுப்பது இலகுவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.