குறைந்த வருமானம் ஈட்டும் மத்தியதர குடும்பங்களுக்காக 7,500 வீடுகளை அமைக்க பிரதமர் உத்தரவு!
NewTamilNews.ComDecember 15, 20200
Comments
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் மத்தியதர குடும்பங்களுக்காக 7,500 வீடுகளை அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனாக கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இம்மாத இறுதிக்கு முன்னர் மேற்படி வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.