லிந்துலை சுகாதார வைத்திய காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இன்று(21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டயகம மேற்கு தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் அக்கரபத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 3 பேரும் லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.