பத்தாயிரம் தொழில் வாய்ப்புகள்!

புதிய பத்தாயிரம்  தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் மூன்று வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் அடுத்த வருடம் நாட்டிற்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நிகழ்ச்சித் திட்டங்களும் பாரியளவிலான வேலைத்திட்டங்களாகும்.இதன் மூலம் 550 பில்லியன் ரூபா இலங்கைக்கு கிடைக்கும்.

அடுத்த வருடத்தில் கிடைக்கும் முழு வெளிநாட்டு முதலீடுகளின் பிரகாரம் நாட்டில் சுமார் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.துறைமுக நகரில் சர்வதேச மாநாட்டு மண்டபம்,ஹம்பாந்தோட்டை தொழிற்பேட்டையின் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மருந்து உற்பத்தி நிலையம் என்பன இந்த மூன்று நிகழ்ச்சித்திட்டங்களாகும்.