Sunday, December 27, 2020

கொட்டகலையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை நேற்று மாலை வெளியானதையடுத்து குறித்து ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலவாக்கலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உட்பட 35 வயதுடைய பெண் ஒருவர்,20 வயது இளைஞன் ஒருவருமாக மூவருக்கும், தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் 56 வயது ஆண் ஒருவருக்கும்,கொட்டகலை டிரேட்டன் கே.ஒ பிரிவில் 59 வயது பெண் ஒருவர், டிரேட்டன் டீ.டி பிரிவில் 20 வயது பெண் ஒருவர்,டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவருமாக ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!