Thursday, December 17, 2020

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு முதன் முறையாக அரச அனுசரணை.

சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை முதல் தடவையாக அரசாங்கத்தின் அனுசரணையோடு நடத்தப்பட உள்ளது.இதற்கான முன்னேற்பாடாக புனித புத்தர் சிலை,புனித பூஜை பொருட்களுடனான பெரஹரா யாத்திரை எதிர்வரும் 27ம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் நான்கு திசைகளிலிருந்தும் சிவனொளிபாத மலை புனித தலத்தை சென்றடையவுள்ளது.

இதன்பிரகாரம் பலாபத்வல, குருவிட்ட, பலாங்கொடை, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இந்த ஊர்வலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் நடைபெற உள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே ஆகியோரது தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4 ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் பக்தர்களது எண்ணிக்கையை ஒரு ஊர்வலத்துக்கு 50 பேர் வீதம் கட்டுப்படுத்தல்,வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தல், வழமையான வீதி பூஜைகளை நடத்தாமல் இருத்தல், வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளில் கடமையாற்றுவோருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தல், 4 ஊர்வலங்களிலும் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பிரதேச செயலாளர அனுமதி சான்றிதழ் பெறல்,நான்கு வீதிகளிலும் தொற்று நீக்கம் செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!