முல்லேரியா ஆரம்ப வைத்திய சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிசிஆர் இயந்திரத்துக்கு தேவையான இரசாயன பதார்த்தம் இன்மையால் இதன் பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.குறி த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்த இயந்திரத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் செய்யும் வாய்ப்பு காணப்பட்ட போதிலும் தற்போது ஆயிரத்துக்கும் குறைவான பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிசிஆர் இயந்திரத்துக்கான இரசாயன பதார்த்ததுக்கான கோரிக்கை விடுத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சுகாதார அமைச்சின் தலையீட்டுடனேயே இந்த இரசாயன பதார்த்தத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடியும் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.