அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்செல்வன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .
கடந்த 16ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்ட அவர் அறிக்கையின் முடிவு வருவதற்கு முன்பதாக சுய தனிமைப்படுத்தலின் விதிமுறைகளை மீறி வெளியில் சென்று செயற்பாடுகளை மேற்கொண்டமையினாளேயே இவ்வாறு அவருக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தவிசாளர் அவர்கள் அம்பாந்தோட்டையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வரும் நிலையில் இது தொடர்பான விளக்கத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னரே சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் குறிப்பிட்டார்.