ஒரு வருட காலத்துக்குள் மதுபான பாவனையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கனரக வாகன சாரதி அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள நபர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ்கள் மற்றும் கனரக வாகன சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் புதிய நடைமுறையை பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.