Thursday, December 24, 2020

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தலைவர் உட்பட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென பொது சுகாதார பரிசோதகர் ஆர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின்போது அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்பிரமணியம் கதிர்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16ம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற அரசியல் மற்றும் ஏனைய கூட்டங்களில் அவரும் கலந்து கொண்டுள்ளார்.அவருடன் கலந்து கொண்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாள் மத்திய மாகாண சபை பிலிப்குமார் ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரதேச சபைத் தலைவர் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.தலவாக்கலை மற்றும் கொட்டகலை சி.எல்.எப் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளதால் அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!