Monday, December 21, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் பலி!


இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதற்கமைய இதுவரை நாட்டில் 176 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும்,கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!