Thursday, December 17, 2020

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்புபவர்களுக்கான புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்புபவர்களுக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு 6 அம்சங்கள் உள்ளடக்கிய புதிய வழிகாட்டல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றும் நபர்களை தத்தமது வீடுகளில் 14 நாட்கள் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வழிகாட்டல்கள் தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1.இலங்கைக்குள் நுழைந்ததன் பின்னர் முதல் நாள் பிசிஆர் செய்வது கட்டாயமாகும்.

2.அரச வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்குள் தனியறை அல்லது இரட்டை பகிர்வு (நபர்களின் எண்ணிக்கை குறைந்தது இரண்டு அல்லது ஒரே குடும்ப அங்கத்தவர்கள்) ஆக இருத்தல் வேண்டும்.

3.இந்த அறைகளுக்கு தனியான சுகாதார வசதிகள் காணப்படவேண்டும் என்பதுடன் தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுடன் தொடர்பைப்பேணக்கூடாது.

4.தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் பிற தனிமைப்படுத்தல் நபர்களுடன் கலந்து விடக்கூடாது.

5.தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்குள் 12-14 நாட்களுக்கு இடையில் பிசிஆர் முன்னெடுப்பது அவசியம் என்பதுடன் இதன் பெறுபேறு எதிர்மறையாக இருக்க வேண்டும்.

6. 14 நாட்கள் நிறைவின் போது சம்பந்தப்பட்ட மத்திய நிலையத்தின் பொறுப்பான அதிகாரி அல்லது பிரதேச சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்த லுக்கு உள்ளான நபர் குறித்து திருப்தி அடைந்திருத்தல் வேண்டும்.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள ஆறு அடிப்படை அம்சங்கள் அடங்கிய வழிகாட்டல்களை முழுமைப்படுத்தும் நபர்கள் தமது வீடுகளில் மீண்டும் 14 நாட்கள் தனிமையில் இருப்பது அவசியம் இல்லை என சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!