மேல் மாகாணத்தில் பயண கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பாதிப்புகள் ஏற்படலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது சிறந்த தீர்வாக அமையும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.