இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய இதுவரை நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது உடைய ஆண் ஒருவரும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது உடைய ஆண் ஒருவரும் கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.