Thursday, December 24, 2020

வட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று!



வட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் பி.காமதேவன் தெரிவித்தார்.

நேற்று மாலை வெளியாகிய அறிக்கையில் 4 ஆண்கள் 6 பெண்களுமாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

கடந்த 14ஆம் திகதி வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 60 பேருக்கு கடந்த 17ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகியபோது மேற்படி 10 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் நான்கு பெண்கள் வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பிசிஆர் மேற்கொள்ளப்பட்டுள்ள 60 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வட்டவளை ஆடை தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!