கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலை நிறுவப்பட்டுள்ளது.
இதுவரையில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர் மயுரமான்ன தெவொரகே தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 28 கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளான 4 கர்ப்பிணி பெண்கள் பிரசவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.