Thursday, November 19, 2020

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை ரூபாய் 70 ஆயிரம் மில்லியன் செலவு!

covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை 70,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று(18) இரவு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 69 லட்சம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். நாட்டை பாதுகாப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. குறுகிய காலப்பகுதியில் அதனை எம்மால் செய்ய முடிந்தது.தற்போது நாட்டு மக்கள் எவ்விதத்திலும் அச்சப்பட தேவையில்லை.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு பலவீனம் அடைந்த காரணத்தால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு பிரிவிற்கு உரிய அதிகாரிகளை நியமித்து அவர்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தேன்.

அதேபோல் வீழ்ச்சியடைந்திருந்த புலனாய்வு பிரிவை மறுசீரமைத்து மீண்டும் புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி எவ்விதத்திலும் நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!