போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போகம்பரை சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 7 கைதிகளும் வெலிகந்த கொவிட்-19 வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அவர்களில் 22 பேர் பெண்கள் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.