பொரளை பொலிஸ் நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 56 பொலிஸாருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 நேற்று(04) பொரளை பொலிஸ் நிலையத்தின் 51 பேர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையிலேயே இந்த எண்ணிக்கை இவ்வாறு 56 ஆக அதிகரித்துள்ளது.

பொரளை பொலிஸ் நிலையத்தில் சுமார் 300 பொலிஸார் கடமையாற்றும் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 இதுவரை பொலிஸ் திணைக்களத்தில் மொத்தம் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.