ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 19 தொற்றாளர்கள்.

ஹொரணை பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலேயே 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.

இத் தொழிற்சாலையில் அண்மையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து ,145 பெயருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இவர்களுள் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் 6,000 பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.