ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் இல்லை!!!

கொரோனா ஒழிப்பு செயல் அணியுடன் இன்று (5)முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், 

ஊரடங்கு சட்டத்தை நீக்கினாலும் சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பில் தற்போது லிருந்தே மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினார்.