Thursday, November 5, 2020

நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஒரே நேரத்தில் விசேட பூஜையில் ஈடுபடுமாறு பிரதமர் வேண்டுகோள்.

உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் ஒரே நேரத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமரும் புத்தசாசன அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதன்படி கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி பௌத்த விகாரைகள், இந்து கோவில்கள்,கிறிஸ்தவ,இஸ்லாம் வணக்க ஸ்தலங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரே நேரத்தில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு அவர் கோரியுள்ளார்.

மேலும் மகாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனைகள் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!