மேல் மாகாணத்தில் 9ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கை தளர்த்த வாய்ப்புள்ளது...

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது 9ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரவியுள்ள வைரஸானது சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால் கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.