Sunday, November 1, 2020

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.பெரேரா தெரிவித்துள்ளார்.


சிங்கள ஊடகம் ஒன்றின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது,தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய தேதியில் பாடசாலைகளை மீளத் திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தாமதமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது மாணவர்களும் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.

மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது இருக்க மீண்டும் தொலைக்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்திய வகையில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வசதிகள் குறைந்த கிராமப்புற மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 5 ஆம் திகதி வழங்கப்பட்டது.

உயர்தர பரீட்சை முடிவடைந்ததும் மூன்றாம் தவணை நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!