கொரோனா தாக்கத்தினால் இலங்கையில் மேலும் இரு உயிரிழப்புக்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.


 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 81 மற்றும் 58 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இது தொடர்பாக மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.