குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு மக்கள் வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது...

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை(2) முதல் மறு அறிவித்தல் வரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய தேவைகளுக்காக அலுவலக வேலை நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவை தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. கடவுச்சீட்டு பிரிவு - 070-7101060 , 070-7101070

2. குடியுரிமைப் பிரிவு- 070-7101030

3. வெளிநாட்டு தூதரக பிரிவு - 011-5329233, 011-5329235

விசா பிரிவு- 070-7101050

துறைமுகங்கள் பிரிவு 077-7782505

பொதுவான ஆலோசனைகளும் மேலதிக தகவல்களும்- www.immigration.gov.lk

இதேவேளை கண்டி,வவுனியா மாத்தறை,குருநாகல் பிராந்திய அலுவலகங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கும் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது நாட்டில் அமுலில் உள்ள சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு 07 07 10 1060, 070 710 1070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ஒதுக்கிய பின்னர் பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.