105 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று..

இலங்கையில் 105 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தெமட்டகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 இதற்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் இதுவரையில் 26 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.