Sunday, November 29, 2020

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன...

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் திறக்கப்படும்.ஆயினும் சில பகுதிகளுக்கான முடக்கம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு தெருக்கள் நாளை காலை திறக்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மெனிங் சந்தை,4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு தெருக்களில் பணியாற்றுபவர்களுள் அதிகமானோர் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பு வடக்கில் தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!