Thursday, November 5, 2020

ராகவா லாரன்ஸின் திரைப்படத்தை தடைசெய்ய வலியுறுத்தும் ரசிகர்கள்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள 'லட்சுமி பாம்ப்' படத்தை தடை செய்யக்கோரி ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.


ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது.அந்த திரைப்படத்தில் சரத்குமார் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார். அதற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தது

தற்போது ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து 'லட்சுமி பாம்ப்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

அந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்திற்கு அங்கு எதிர்ப்பு நிலவி வந்தது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஹிந்து கடவுளின் பெயரான லட்சுமி என்பதுடன் பாம்ப் என்று இடம்பெற்றுள்ளமை இந்துக்களை அவமதிப்பதாக எழுந்த புகார்களையடுத்து படத்தின் பெயர் 'லக்ஷ்மி' என மாற்றப்பட்டது.

தற்போது லக்ஷ்மி திரைப்படம் நவம்பர் 9ஆம் திகதி எல்லா நாடுகளிலும் ஓ.டி.டியிலும் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் தியேட்டர் மற்றும் ஓ.டி.டியிலும்  சேர்ந்து வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து மதத்தை அவமதிப்பது போன்ற பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் மூன்றாம் பாலினத்தவர்களை அவமதித்ததாகவும் கூறி படத்தை தடை செய்ய ஏராளமான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.டுவிட்டரில் #Ban_Laxmmi_movie  என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!